FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, June 14, 2016

"36 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை'



13.06.2016
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டை மிக, மிக முக்கியமான ஒன்று. இதை வாங்கினால், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியும். இதுவரை தேசிய அடையாள அட்டை வாங்காதவர்கள் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தால் அங்கேயே, ஊனத்தின் தன்மை அளவிடப்பட்டு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 90 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 36,136 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 60 சதம் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல்வர் உத்தரவின்படி 40 சதம் ஊனம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது தவிர கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து, 169 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக பேசிய நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்தார்.

இதில், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா சந்திரன், அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment