01.06.2016
திருவண்ணாமலை மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களைப் பெற தகுதியான மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2015-16ஆம் நிதியாண்டுக்கான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, பின்னர் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
இந்த தையல் இயந்திரங்களைப் பெற விருப்பமும், தகுதியும் உள்ள 18 முதல் 45 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளிகள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்று சான்று பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயது சான்று, தையல் தேர்ச்சி பெற்ற சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment