14.06.2016
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையின் வேலை வாய்ப்பு பெறும் விதமாக வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஜீன் மாதம் 17.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், கல்வித்தகுதி உடையவர்கள் மேலும் இது போன்ற அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆப்புரேட்டர், டெய்லர், டேட்டா என்ட்ரி ஆப்புரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை அனைத்து கல்வித் தகுதி உடைய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளி பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனூதாரர்கள் வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
17.06.2016 அன்று காலை 10.30 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிக்கிறார்.
No comments:
Post a Comment