22.06.2016, ஈரோடு: 'காலிப்பணியிடங்கள், அரசு வளாகங்களில் உள்ள வேலைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், முதல்வர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்களிடமும் மனு வழங்கினர்.
இது குறித்து, மாவட்ட தலைவர் துரைராஜ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், கணவன், மனைவி போன்றோருக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். எனவே, தனியாக ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். உள்ளாட்சிகள் மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள், வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பணிகளை ஒதுக்க வேண்டும். வணிக வளாக கடைகளை ஏலத்துக்கு விடும்போது, குறிப்பிட்ட கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு, மூன்று சதவீத இடஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், ஆண்டுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவர்களுக்கான உபகரணங்கள், தொழில் துவங்கும் உதவி போன்றவைகள் முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment