02.06.2016, ஈரோடு,
பெரம்பலூர் மாவட்டம் தேவையூரை சேர்ந்தவர் சலிம்கான். இவருடைய மனைவி தஸ்லிம்பேகம். இவர்களுடைய மகன் அஜிம்கான் என்கிற அஜ்மல் (வயது 12). இவன் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன். இந்தநிலையில் சலிம்கான் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்ததும் அவர்கள் பெரம்பலூர் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அஜ்மலை அவருடைய பாட்டி மும்தாஜ்பேகம் கையை பிடித்துக்கொண்டு அழைத்து சென்றார். இந்தநிலையில் பிளாட்பாரத்திற்கு செல்லும்போது சிறுவன் அஜ்மல் திடீரென அங்கிருந்து ஓடினான். ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது 3–வது மற்றும் 4–வது பிளாட்பாரங்களில் நின்றிருந்த ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. இதனால் அஜ்மல் எந்த ரெயிலில் ஏறிச்சென்றான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து சலிம்கான் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அஜ்மலை தேடி வருகிறார்.
No comments:
Post a Comment