04.06.2016, மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, காதுகேளாத ௧௯ குழந்தைகளுக்கு, 'காக்லியர் இம்பிளன்ட்' (உட்செவிச்சுருள் பதியம்) அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளது.
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறைத்தலைவர் தினகரன் கூறியதாவது: கடந்த நான்கு மாதத்தில், பிறவியிலேயே காது கேளாத, ௬ வயதிற்குட்பட்ட ௧௯ குழந்தைகளுக்கு 'காக்லியர் இம்பிளன்ட்' அறுவை சிகிச்சையை செய்துள்ளோம். மேலும் 3 குழந்தைகளுக்கு வரும் வாரத்தில் செய்யவுள்ளோம்.
சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாயை நோய் தாக்குதல், வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் கேட்கும் திறனின்றி பிறக்கின்றனர், என்றார்.
டீன் வைரமுத்து ராஜா கூறியதாவது: சிகிச்சையில் குழந்தைகளின் உடலில் பொருத்தப்படும் கருவியின் மதிப்பு மட்டும் ரூ.௫ லட்சமாகும். தனியார் மருத்துவமனையில் கருவி மற்றும் சிகிச்சைக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும்.
ஆனால், நாங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்கிறோம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டால், இலவசமாக செய்ய முடியாது என விதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இலவசமாக செய்கிறோம், என்றார்.
No comments:
Post a Comment