FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, June 14, 2016

செவித்திறன் குறைந்த குழந்தைகளை கண்டறிய பரிசோதனை மையம் திறப்பு

திருநெல்வேலி, 08 June 2016, செவித்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனை மையம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

பிறந்த குழந்தை முதல் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை நவீன கருவிகள், உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும், தொடர்ந்து அக்குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவுத் தன்மைக்கு ஏற்ப தகுந்த காதொலிக் கருவிகள் வழங்கும் வகையிலும் திருநெல்வேலியில் ரூ. 5.40 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் துறை கட்டுப்பாட்டின் கீழ், திருநெல்வேலியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை ஆட்சியர் மு. கருணாகரன் திறந்துவைத்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காதொலிக் கருவிகள் வழங்கினார். இம்மையம் காலை 11 முதல் மாலை 3 மணி வரை செயல்படும். காதொலிக் கருவிகள் பொருத்தப்பட்ட குழந்தைகள் அரசால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்ற குழந்தைகள் தமது 5ஆவது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.

திருநெல்வேலி பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி மூலம், சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் 5 வயதில் உள்ள செவித்திறன் குன்றிய குழந்தைகளை சேர்த்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எப். சாந்திகுளோரி எம்ரால்ட், கேட்பியல் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் தா. அனிதா ஆரோக்கியபிரமிளா, முடநீக்கியல் வல்லுநர் ந.வி. ஜெய்கணேஷ், பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளித் தாளாளர் கே. சுதன், பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை திலகவதி, புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளித் தலைமையாசிரியை சபீனா, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment