FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 21, 2015

கப்பல் கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள்

21.12.2015, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தில் 1121 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய கடற்படைக்காக கப்பல்களை தயாரிக்கவும், பழுது பார்க்கவும் உதவும் கப்பல்தளம் ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. தற்போது இங்கு டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக என்ஜின் பிட்டர் பணிக்கு 213 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிட்டர் பணிக்கு 179 இடங்களும், பிளேட்டர் பணிக்கு 84 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 77 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர் பணிக்கு 58 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் கடைசி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித் தகுதி:

கம்ப்யூட்டர் பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் பிட்டர், ரேடார் பிட்டர், ரேடியோ பிட்டர், சோனார் பிட்டர், மெஷினரி கண்ட்ரோல் பிட்டர், எலக்ட்ரிக்கல் பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட், என்ஜின்பிட்டர், பாய்லர் மேக்கர், ஐஸ் பிட்டர், ஜி.டி. பிட்டர், பைப்பிட்டர், ரெப்–ஏசி பிட்டர், பேட்டன் மேக்கர், பவுண்டரி, பெயிண்டர், பிளாக்ஸ்மித், பிளேட்டர், சிப்ரைட், வெல்டர், மில்ரைட் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளது. இந்த பிரிவுகளில் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (என்.ஏ.சி.) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அதில் சுய சான்றொப்பம் செய்து புகைப்படம், சான்றிதழ் நகல்கள், கூடுதல் புகைப்படங்கள், ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் œ The Admiral Superintendent (for Manager Personnel), Naval Dockyard, Visakhapatnam14 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் முறையில் அனுப்பப்பட வேண்டும்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு டிசம்பர் 12–18 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய கூடுதல் விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment