திருச்சி, 11 December 2015,
பார்வையற்றோருக்கு அடிப்படைக் கணினிப் பயிற்சியை திரைவாசிப்பான் மூலம் அளித்து, அவர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
இப்பல்கலைக்கழகத்தின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையும், பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பும் இணைந்து இப்பயிற்சியை கடந்த ஒருமாதமாக திருச்சி காஜாமலை வளாகத்தில் நடத்தின. இதுபோன்ற பயிற்சி சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் நடத்தப்பட்டது.
பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சி. திருச்செல்வம் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற 15 பேருக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
பயிற்சி அளித்தது எப்படி: பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பதால், அவர்களுக்கு திரைவாசிப்பான் வசதி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பார்வையற்றோர் கணினியில் அடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒலியாக கிடைக்கும் என்பதால் பயிற்சி பெறுபவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயிற்சி பெற்றனர்.
இதன் மூலம் அவர்கள் கணினி சார்ந்த அனைத்து திறன்களையும் பெற்றுள்ளனர் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள்
நலத் துறையின் தலைவர் முனைவர் எம். பிரபாவதி.

No comments:
Post a Comment