கடலூர், 22 December 2015
மாற்றுத் திறனாளிகள் கடலூரில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை, கடந்த ஓராண்டாக வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊனத்துக்காக வழங்கப்படும் உதவித்தொகையை காரணம் காட்டி, கல்வி உதவித்தொகை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தினர் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை தாங்கினார்.
செயலர் பொன்.சண்முகம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, பாலமுருகன், இலக்கியா உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடமும் மனு அளித்தனர்.

No comments:
Post a Comment