23.12.2015, மதுரை :
''இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது'' என, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.மையத்தை திறந்து வைத்து சகாயம் பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதனால்தான் நாமக்கல் கலெக்டராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். உடல் குறையோடு, வலியுடன் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தாலும், மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கிறது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தடைகற்களையும், படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும், என்றார்.பயிற்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை முதல்வர் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெலன் ரத்தின மோனிகா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment