FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, December 12, 2015

ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாற்றுத் திறனாளி தம்பதி போராட்டம்

கோவை,11 December 2015
ஆவின் பாலகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி தம்பதி ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சந்தியா. இவரும் மாற்றுத் திறனாளியாவார். மாரியப்பன் ரெயின்போ பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் ஒயர் கூடை, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலை செய்து வந்தார்.

சாலையோரக் கடைகளை அகற்றும்போது வேலை வாய்ப்பை இழந்த மாரியப்பன், ஆவின் பாலகம் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது மனுவை ஆவின் அதிகாரிகள் ஏற்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரியப்பன், அவரது சந்தியா, மகன் ரியாந்த் ஆகியோருடன் ஆவின் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆவின் தலைவர் டி.தாமோதரன், பொது மேலாளர் கே.சுமதி ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினரின் அனுமதியைப் பெற்று வந்தால் அவரது மனுவை பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாரியப்பன் தம்பதி போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment