FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 21, 2015

இலங்கை கடற்படையினர் நடவடிக்கை: காதுகேளாத வாய் பேசாதவன் உட்பட தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

21.12.2015, புதுக்கோட்டை, 
தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றனர்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 234 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 289 விசைப்படகுகளிலும் என மொத்தம் 523 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்களில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரது மகன் தமிழ்ச்செல்வன்(வயது 40), பேரன் மணிகண்டன்(15), ராமச்சந்திரன்(35), மூர்த்தி (35), அருளாந்து(40), செல்வமணி(45) ஆகிய 6 மீனவர்களும் நேற்று அதிகாலை நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சிறைபிடித்து சென்றனர்

அப்போது அங்கு திடீரென்று இரண்டுக்கும் மேற்பட்ட அதிநவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீனவர்கள் சென்ற விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகு ஆகியவற்றை சிறைபிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரையும், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜெகதாப்பட்டின மீனவர்கள் 6 பேரையும் ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களையும் வருகிற 31-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நடைபெறுமா?

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட குப்புராஜின் விசைப்படகில் அவரது மகன் தமிழ்ச்செல்வன், பேரன் மணிகண்டன் உள்ளிட்ட 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் தமிழ்செல்வன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி, தமிழ்ச்செல்வனின் மகள் தமிழேந்திக்கு வருகிற பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருமணத்திற்காக பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்ச்செல்வன் செய்து வந்த நிலையில் அவரும், அவரது மகனும் இலங்கை சிறையில் அடைபட்ட துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தையும், மகனும் சிறையில் உள்ள நிலையில் தமிழேந்தியின் திருமணத்திற்கான பணிகளை அவரது தாத்தா குப்புராஜ், தாயார் லெட்சுமி ஆகியோரே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பாக பல்வேறு பணிகளை தமிழ்செல்வன் செய்யவேண்டிய நிலை உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்செல்வன் உள்ளிட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ்ச்செல்வன் மகளின் திருமணம் தடைபடும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment