நெய்வேலி, 17 December 2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
மழை வெள்ளத்தால் மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உபகரணங்களையும், அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசே வீடு கட்டித்தர வேண்டும்.
இவர்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் உபகரணங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment