FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, December 15, 2015

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும்

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமும், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் திங்கள்கிழமை இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சமுகத்தில் சலைத்தவர்கள் அல்ல என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் மாற்றுத்திறனாளிகளும், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களதும் பங்களிப்புடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியூடாக வாழைச்சேனை துறைமுக சந்தி வரை சென்றதுடன் மாற்றுத் திறனாளிகளது கலை நிகழ்ச்சிகளும் பரிசில் வழங்கும் நிகழ்வும் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நாடாத்திய இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஸீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment