FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 21, 2015

உண்டியலில் பணம் திருடிய DEAF சிறுவன்: சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு

21.12.2015, திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

போளூர் அருகே, அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின், 16 வயது மகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து, பின் மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை, புதுப்பாளையம் கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்து, 500 ரூபாயை திருடினார். பின் காங்கேயனூர் மலை மீது உள்ள முருகன் கோவிலில் பணத்தை திருட முயன்றபோது, பொதுமக்கள் மடக்கி பிடித்து கலசப்பாக்கம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். பிடிபட்ட சிறுவன் வாய் பேச முடியாதவர் என்பதால், திருவண்ணாமலை ரங்கம்மாள் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சங்கர் வரவழைக்கப்பட்டு, அவர் உதவியுடன் சிறுவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரிடம் இருந்து, ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் திருடப்பட்ட, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின் கலசப்பாக்கம் போலீசார் சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment