FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 7, 2015

நெல்லை மாவட்டத்தில் 49,999 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளி அட்டை: ஆட்சியர்

05.12.2015, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 49,999 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மாற்றுத் திறனாளிகள் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.500 வழங்கி வந்ததை தமிழக முதல்வர் ஜெயலிலதா ரூ. 1,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை மூலம் 16 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர 49,999 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளில் 3 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறு. தனியார் துறைகளிலும் இத்தகைய ஒதுக்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்த வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 10 பேருக்கு ரூ.5.57 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு நவீன காதொலிக் கருவிகள், 5 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு சாதனம் என மொத்தம் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், எம்எல்ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். துரையப்பா, முத்துச்செல்வி, மேயர் இ. புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அமர் சேவா சங்கச் செயலர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment