FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, December 25, 2015

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்,  25 December 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்குத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கு), நிலம் மேம்பாட்டுத் திட்டம் (இரு பாலருக்கும்), தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் போன்ற தொழில்கள் தொடங்க தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்.

மகளிர் சுய உதவிக் குழு, கலப்புக் குழு, ஆண்கள் சுய உதவிக் குழு, திருநங்கைகள் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழு ஆகியவற்றுக்கான சுழல் நிதி, பொருளாதாரக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சியர் தன் விருப்புரிமை நிதி மற்றும் மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 40 வயதுக்கும் அதிகமான திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் - பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புகிறவர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மக்கள் இத்திட்டங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

No comments:

Post a Comment