FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, December 12, 2015

ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச. 10–
சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நினைவு இல்ல வளாகத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்து வந்த மாணவ–மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தன. எம்.ஜி.ஆர். கைப்பட எழுதிய 10 டைரிகள், பயன்படுத்திய கிராமபோன் மற்றும் விருதுகள், கேடயங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி இருந்தது.

இந்த பொருட்கள் அனைத்தும் நினைவு இல்லத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும் சேதம் அடைந்து இருந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு 20 அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீரமைப்பு பணி குறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறும் போது, ‘‘நினைவு இல்லத்தையொட்டி நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியை விரைவாக முடித்து அங்கு பெரிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். வருகிற ஜனவரி 17–ந்தேதி எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் ஆகும். இந்த நேரத்தில் இப்படி நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக காதுகேளாதோர் பள்ளியில் இருந்த குழந்தைகளை நானும், எனது நண்பர் ஒருவரும் தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றி மொட்டைமாடிக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதற்காக அவர்களது காலில் விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment