FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, December 29, 2015

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம்

காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தெளிவான மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேசமுடியாது
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் 2006–ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை டாக்டர்கள் குழு முன்பு ஆஜர்படுத்தி மருத்துவ சோதனைக்கு உள்ளாகும்படி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவரது உடல் நிலையை டாக்டர்கள் சோதித்தனர். பின்னர், அவரால் பேசவோ, எழுதவோ, பிறர் உதவியில்லாமல் செயல்படவோ முடியாது என்று டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ரத்து செய்யவேண்டும்
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் சண்முகசுந்தரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் நல்ல மனநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கலாம் என்று குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

தண்டிக்கலாம்
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், ‘நல்ல மனநிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால், சராசரி மனிதர் குற்றம் செய்தால், எவ்வாறு வழக்குகள் விசாரிக்கப்படுமோ, அதேபோல வழக்கை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். எனவே குற்றவியல் விசாரணை முறை சட்டம் 318, அரசியல் சட்டத்துக்கு எதிரானது கிடையாது’ என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment