FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, December 12, 2015

மழை விட்ட பின்பும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தொடரும் துயரம்!

மழை விட்ட பின்பும் அது விட்டு சென்ற பாதிப்பினை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பார்க்க முடிகிறது. அடையாறு ஆறு பொங்கி எழுந்த பொழுது கரையோரம் வாழ்ந்த மக்களின் துயரம் சொல்லி முடியாது. நந்தனம் பகுதியிலும் அதன் தாக்கத்தை விரிவாக உணர முடிகிறது.

சென்னையில் உள்ள நந்தனம் YMCA உடற்கல்வி கல்லூரியில் அமைந்துள்ளது மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி. சாதரணமான நாட்களில் 40 குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி பாடம் கற்கும் பாடசாலை இன்று இருக்கும் நிலை மிகவும் கவலைக்கிடமானது.



டிசம்பர் 2-ம் தேதி பெய்த பெருமழையால் பள்ளியின் உட்கூரை (சுமார் 7 அடி) வரை தண்ணீர் நிரம்பியது. தண்ணீர் வடியவே இரண்டு மூன்று நாட்கள் ஆனது. கால் வைக்க முடியாத அளவிற்கு பள்ளியின் உள்ளே முழுவதும் சேறு. எங்கு பார்த்தாலும் கவிழ்ந்து கிடக்கும் மேசைகள், உபகரணங்கள், சுவரில் இருக்க வேண்டிய கரும்பலகை தரையில் இருப்பதால்தான் வழுக்காமல் சில இடங்களில் நடக்கவே முடிகிறது. தண்ணீரில் ஊறிப்போய் கிடக்கும் இசைக்கருவிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள்.

மின் கசிவு இருப்பதால் பள்ளியே இருளில் மூழ்கி இருக்கிறது. படிக்கும் குறைபாடு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி மற்றும் விளையாட்டு பொருட்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. பார்வை சம்பந்தப்பட்ட பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி, டி.வி.டி பிளேயர், கணினிகள் என அனைத்தும் முற்றிலும் செயலிழந்து கிடக்கின்றன.

உடற்பயிற்சி அறை, விளையாட்டு அறை, நூலகம், வகுப்பறைகள் என எல்லா அறைகளுமே உருக்குலைந்து காணப்படுகின்றன. நாற்காலிகள், மேசைகள் எல்லாம் வெள்ளத்தில் பல அடிகள் நகர்ந்து ஜன்னல் ஓரத்தில் தள்ளப்பட்டுள்ளன. புத்தக அலமாரி கவிழ்ந்து தரையெல்லாம் புத்தகங்களும், பொம்மைகளும் சிதறி கிடக்கின்றன.



அலமாரிகளில் வைக்கப்பட்ட புத்தகங்கள், கோப்புகள் எல்லாம் முழுவதும் தண்ணீர் புகுந்து சேதம் ஆகியிருப்பதால், அலமாரியை திறக்காமலேயெ வைத்திருக்கின்றனர். எல்லா அறைகளிலும் இதே நிலைமைதான். உடற்பயிற்சிக்காக 3 லட்சம் செலவு செய்து வாங்கிய ஊஞ்சல், பீன் பேக், கண் மற்றும் கை ஒருங்கிணைப்பு விளையாட்டு உபகரணகங்கள், சிறிய சறுக்கு மரம், மாணவர்கள் குதித்து பயிற்சி எடுக்கும் ட்ராம்போலீன் ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன. சில அறைகளின் கதவுகள் ஈரத்தால் திறக்க முடியாத நிலைமையிலேயே உள்ளன.

தனியார் நிறுவனங்கள் பலவும் இதுபோன்ற தெரப்பிக்கு ஒரு மணி நேரத்திற்கே அதிகமான காசு வசூலிக்கும் போது, இங்கே மாதத்திற்கு 500 ரூபாய் மட்டுமே. பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த தொகையும் கிடையாது. இது வெறும் தெரப்பி மட்டுமல்லாமால், அந்த மாணவர்களுக்கு பகல் நேர காப்பகமாக செயல்படுகிறது. இங்கே பயிலும் பல மாணவர்கள் சாதாரண பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். சென்ற வருடம் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். அவர்கள் காலையில் பள்ளி சென்றாலும் மதியத்திற்கு மேல் இங்கு வந்து பாடம் கற்று செல்வார்கள்.



இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “இந்த சிறப்பு பள்ளி 2006-ல் கல்லூரி நிதியிலிருந்து அமைக்கப்பட்டது. சுமார் 40 லட்சம் செலவு செய்து இதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டன. தற்போது 5 வயது முதல் 35 வயது வரை உள்ள 40 மாணவர்கள் உள்ளனர். தனியாக ஆசிரியர்கள் என யாரும் கிடையாது. கல்லூரியில் உடல் கல்வி (B.P.E & M.P.E) பயிலும் மாணவர்கள்தான் பகுதி நேரத்தில் இங்கே பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இது மற்ற சிறப்பு பள்ளிகளை போல மாணவர்களின் கற்றல் திறனை விட, அவர்களின் உடல் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்கிறது.

மாணவர்களுக்கு யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் தெரப்பி மையங்களில் ஆட்டிசம் போன்ற ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இங்கே டவுன்ஸ் சின்ட்ரோம், ஆட்டிசம், கற்றல் குறைபாடு என பலதரப்பட்ட குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கென வெவ்வேறு விதமான பயிற்சி முறைகளை கையாண்டு வருகிறோம்'' என்றார்.



மீண்டும் இந்த பள்ளியை சீரமைக்க தேவையான நிதிக்காக காத்திருக்கிறது இந்த பள்ளியும், அங்கே பயிலும் மாணவர்களும். தீபாவளி விடுமுறைக்காக மூடப்பட்ட பள்ளி கதவுகள் திறக்காமலே போய்விடுமோ என்ற கவலையை மட்டுமே காணமுடிகிறது தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முகத்தில்.

பலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த பள்ளிக்கு நாம் உதவுவது கடமை!
ஐ.மா.கிருத்திகா

No comments:

Post a Comment