கோவை, 21 December 2015,
கோவை ஈஷா யோக மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாய் பேச இயலாத, காது கேளாத 400 மாற்றுத் திறனாளிகளுக்கு தியான, யோகப் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டன.இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் ஈஷாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.
தியானலிங்கம், லிங்க பைரவி, சூரிய குண்டம், சந்திரக் குண்டம் ஆகிய இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தியானப் பயிற்சியும், மன அமைதிக்காகவும், எதிர்காலத்தை தன்னம்பிக்கையோடு அணுகவும் "உபயோக' என்ற யோகப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் மூன்று வல்லுநர்கள் உதவி புரிந்தனர்.
No comments:
Post a Comment