FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, December 29, 2015

பயணப்படி பெற புதிய அரசாணை: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

29.12.2015, சேலம்:
 'பயணப்படி பெறுவதில், நீடிக்கும் குழப்பத்தை நீக்க, புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியராக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊர்தி படியாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அதிகாரி ஒப்புதல் ஏற்று, ஊர்திபடி வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், தொடர்ந்து, முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பு அலுவலர், ஊர்திபடி வழங்க அதிகாரம் வழங்கி கடந்த 22ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஊர்திபடிக்கு சான்றாக, தேசிய அடையாள அட்டை பயன்படுத்துவது குறித்து, உத்தரவில் குறிப்பிடாதது, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மாற்றுத்திறனாளிகள், கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன் கூறியதாவது: மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரால், ஊனத்தின் சதவீதம், தன்மை ஆகியவற்றை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு வழங்கப்படும், தேசிய அடையாள அட்டையை, ஊர்திபடி பெற சான்றாக ஏற்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி மாநில ஆணையம், கருத்துரு அனுப்பியும், அதுபற்றி, அரசு உத்தரவில், குறிப்பிடாதது குழப்பமாக உள்ளது. எனவே, ஊர்திபடிக்காக, தனியாக சான்றுபெறும் நிலை உள்ளது. செவித்திறன் இழந்து, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திபடி வழங்குவது தொடர்ந்து, மறுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஊர்திபடி கிடைக்க, புதிய அரசாணை வெளியிட்டு, தமிழக அரசு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment