17.12.2015, கோவை,
கோவை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற 4 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு குச்சிகள், காதொலி கருவிகள், 3 சக்கர வாகனங்கள், தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டும், அவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை கல்வி உதவித்தொகையும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த கல்வி உதவித்தொகையை பெற ஏராளமான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவ லகத்துக்கு வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழக அரசு சார்பில் பள்ளியில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற அக்டோபர், நவம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற் காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மற்றும் அதற்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டது.
4 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அதன்படி கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் விண் ணப்பம் கொடுத்து உள்ளனர். தற்போது அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பணி முடிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) இறுதிக்குள் அந்தந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment