24.12.2015, கோவை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, இரு ஆண்டாக விண்ணப்பம் வராததால், திட்டத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ கல்லுாரி ஆய்வு கூடங்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, சேர முடியும்.இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், மாதம், 300 ரூபாய் உதவித்தொகை அளிப்பதோடு, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும், மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதிகளையும், நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு, பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் படிக்க, இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுத்திறனாளி மாணவர்களும் விண்ணப்பிக்கவில்லை.
மாற்றுத்தினாளிகள் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. மூன்று ஆண்டாக, தமிழகம் முழுவதும் இருந்து, 66 பேர் மட்டுமே, பயிற்சி பெறுகின்றனர். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், திட்டத்தை நிறுத்தவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:
Post a Comment