FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 25, 2015

காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்: சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி வழக்கு

25.12.2015,மதுரை,
காதுகேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும்போது சிறப்பு கல்வியியலில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பி.வடிவேல்முருகன். தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத்தலைவரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் தான் பாடம் கற்றுத் தர முடியும். தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேர் சிறப்பு கல்வியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை 2015–2016ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உத்தரவிட வேணடும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆசிரியர் பணி
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கல்வியியல் பட்டம் பற்றி குறிப்பிடப்பட வில்லை. சிறப்புக்கல்வியியலில் பட்டப்படிப்பை(ஸ்பெஷல் பி.எட்.) முடித்தவர்கள் மட்டுமே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலையில் பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் சிறப்புக்கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரத்து செய்ய வேண்டும்

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்க வேண்டும் என்றும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.முனிராஜ் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015 அன்று அனுப்பிய மனுவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment