10.12.2015, சேலம்: ''மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்களை, அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய்பேச இயலாதோர், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ளிட்டோருக்கு, மொழிப்பாடங்கள் ஒன்றிலிருந்து விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம், எழுத உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாததாலும், அவற்றை மாணவர்களிடம் சேர்க்காததாலும், மாணவ, மாணவியர் பலர் பாதிக்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்க, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, இதுவரை வந்த நான்கு அரசாணைகளின் நகல்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக படித்து, தகுதியான மாணவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுத்தர, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment