தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓட்டப் பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
29 வயதான பிஸ்டோரியஸ், கடந்த 2013-ல் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றார். இதையடுத்து கைது
செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், எனது வீட்டுக்குள் திருடர்கள் நுழைகிறார்கள் என நினைத்து சுட்டுவிட்டேன் என விசாரணையின்போது தெரிவித்தார்.
இதன்பிறகு அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஓர் ஆண்டை கழித்துவிட்ட பிஸ்டோரியஸ், இப்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டுக் காவலில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிஸ்டோரியஸ் திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க சட்ட விதிகளின்படி திட்டமிட்டு கிரிமினல் நோக்கத்தோடு செய்யப்படும் கொலைகளுக்கு குறைந்தபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதனால் பிஸ்டோரியஸ் 15 ஆண்டு சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது.

No comments:
Post a Comment