எல்.ஐ.சி. யில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணிக்கு 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா’ சுருக்கமாக எல்.ஐ.சி. என்றழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘அசிஸ்டண்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர்’ பணியிடங்களுக்கு மொத்தம் 700 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் எஸ்.சி. பிரிவினருக்கு 106 பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 53 பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 192 பணியிடங்களும், பொது பிரிவினருக்கு 349 இடங்களும் உள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான 21 இடங்களும் அடக்கம்.
விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே...
வயதுத்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 1–12–2015–ந் தேதியில் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2–12–1985 மற்றும் 1–12–1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் இணைய வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
கட்டணம்:
கட்டணமாக எஸ்.சி./ எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூபாய் 100–ம், இதர பிரிவினர் 600–ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை வழியாக மட்டுமே செலுத்த முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 5–1–2016–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Please line show for lic
ReplyDelete