30.06.2016, கடலூர்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க சிறப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் தீபக், மும்பை நிர்வாக தலைவர் ருக்குமணி சிப்ளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுய தொழில் தொடங்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் நிர்வாகிகள் வெங்கடேசன், சித்ரா, ரேவதி, ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந்தேதி 5–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நடத்துவது, தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய, அவர்களை நேரில் சந்திப்பது, மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment