FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, July 1, 2016

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

30.06.2016, சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத, பிளஸ் 2, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதிகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், பதிவை தொடர்ந்து புதுப்பிப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் தனியார் பணியில் இல்லாதவராகவும் இருப்பவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்படம் அரசின் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை பதிவு எண், உதவித்தொகை எண்ணுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment