மதுரை, 12.07.2016
ஐந்து ஆண்டுகள் கல்வி கடன் வழங்கிய நிலையில், இறுதி ஆண்டுக்கு வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாற்றுத் திறனாளி மகனைப் படிக்க வைக்க வழியின்றி தவிக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.
பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன். இவருக்கு 3 குழந்தைகள். மூவருமே வாய் பேச முடியாத, காது கேளாத குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள். இவர்களில் மூத்த மகள் பிஏ முடித்துள்ளார். இரண்டாவது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். மூன்றாவது மகள் பிளஸ் 2 படிக்கிறார். பிடெக் படிக்கும் ராகேஷுக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் வழங்கியுள்ளனர். இறுதி ஆண்டுக்கு வங்கிக்கு விண்ணப்பம் அளித்த நிலையில், கடன் தொகையை வழங்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில், உதவி கோரி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் பாலமுருகன் மனு அளித்தார்.
அவர் கூறியது: வாடகை ஆட்டோவில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் சம்பளத்தில் தான் 3 குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன். இரண்டாவது மகன் ராகேஷுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.95,200 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.65 ஆயிரம் வங்கிக் கடன் கிடைக்கும் நிலையில், எஞ்சிய தொகையை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வந்தேன். இறுதி ஆண்டில் வங்கிக் கடனையும் நிறுத்திவிட்டனர். கல்விக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது எனத் தெரியவில்லை.
ஐந்து ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பு பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வங்கிக் கடன் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment