FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, July 2, 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றியவர்கள்: 12-க்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்



02.07.2016, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், அதிகம் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுடன் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு ரூ.25 ஆயிரம், தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கான விருது, ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.

இந்த விருதுகளைப் பெற, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை- 78’ அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன். மாற்றுத்திறனாளிகள் மாநில நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாநில ஆணையருக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment