FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, July 1, 2016

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி என்பதால் ஒருவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

30.06.2016, புதுடெல்லி : குப்பை கொட்டச் சென்ற 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குப்பை தொட்டி அருகே வைத்து பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, போக்சோ சட்டத்தின்படி 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தாஅறிவித்தார். தீர்ப்பில் குப்தா கூறியதாவது: தனக்கு நேர்ந்த கொடுமையை மாற்றுத்திறனாளி சிறுமி, சைகையாலும், வரைபடங்களாலும் விளக்கிக் கூறிய விவரங்களே இந்த வழக்கில் நம்பகத்தன்மைக்கு போதுமானது. பொதுவாக மாற்றுத்திறனாளிகளால் ஒரு வரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும்.

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சைகையின் மூலம் பதில் அளிக்கின்றனர். ஒரு சிலர் படமாக வரைந்து காண்பிக்கின்றனர். கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படமாக வரைந்து காண்பிப்பது என்பதும் அவர்களுக்கு கடினமானது. அதுபோல, சைகையாலும் போதுமான விளக்கம் அளிக்க அவர்களால் முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் திறமை அல்லது நம்பகத்தன்மையை குறைத்து எடை போடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி கட்டுப்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளியிடம் அவர்களின் தகுதியை கணக்கில் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment