28.07.2016, ஈரோடு:
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு, ஆன்-லைன் புக்கிங் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே அனைத்து சலுகைளையும் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆனால், ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment