FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, July 31, 2016

மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழு மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை – கருவி

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் மாற்றுத் திறனாளிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் அமைப்பான சமூக வள நிலையத்தின் ஊடாக “கருவி” என்கிற பெயரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து அயராத முயற்சியால் “SHINE DETERGENT LIQUID” எனும் கழிவகற்றும் பொருட்களை சர்வதேச தரத்துக்கு போட்டியிடும் வகையில் உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

சாதரணமாக சலவை செய்யவும் மற்றும் சலவை இயந்திரத்தில் இட்டும் பயன்படுத்த முடியும். இது sunlight ,surexel அல்லது Shambo க்கு பதிலாக பயன்படுத்தலாம் அத்துடன் வாசனைக்காக பிறிதாக வேறொன்றும் வாங்க தேவையில்லை. இவ் கலவையில் வாசனை தரும் வகையில் comfort போன்ற ஒரு வகையிலான சேர்வை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை 190 ரூபா ஆகும்.

இவ் உற்பத்திப்பொருளை எம் உள்நாட்டு கடைகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை சில்லறையாகவே மொத்தமாகவோ விநியோகிக்க முடியும்.

எனவே முகப்பத்தகத்தின் ஊடாக பலசரக்கு கடைகளின் உரிமையாளர்களை சொந்தங்களாகவோ நண்பர்களாகவோ வைத்திருப்பவர்கள் இருந்தால் இதைப்பற்றி தெரியப்படுத்தவும்
மற்றவரது கையை எதிர்பார்க்காமல் தம் மனநம்பிக்கையுடன் தாமே உழைத்துவாழ வேண்டும் என்ற இவர்களது முயற்சி கைகூட வேண்டும்.

உண்மையில் இந்த மாற்றுத் திறனாளிகளின் சிறந்த செயற்பாடு பாராட்டுதற்குரியது.

இவர்களை சிற்றி நியூஸ் இணையத்தளம் வாழ்துகின்றது.

இவர்களின் உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து அவர்களின் முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment