FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, July 4, 2016

என்ஜினீயர்கள்/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2700 பணிகள்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2700 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மாநில கிளைகளிலும் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2700 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதில் சென்னை டெலிபோன் பிரிவில் 80 பணியிடங்களும், தமிழ்நாடு கிளைக்கு 198 இடங்களும் உள்ளன. இது தவிர அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 100 இடங்களும், கர்நாடகாவிற்கு 120 இடங்களும், ஆந்திராவுக்கு 76 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

பி.இ., பி.டெக் படிப்புகளில் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் படித்தவர்கள், 3 ஆண்டுகால என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 10-7-2016 முதல் 10-8-2016-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
www.externalexam.bsnl.co.in என்ற இணைய தள முகவரியைப் பார்க்கலாம்.

CLICK HERE - ADVERTISMENT


No comments:

Post a Comment