FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, July 24, 2016

பணி மாறுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

24.07.2016
ஆத்தூர்: ''தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, காலி பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில், 23 ஆயிரத்து, 815 தொடக்கப்பள்ளிகள், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு, பணி நிரவல் செய்ய வேண்டும். அந்த பணி நிரவல் முறைகளில் பின்பற்றும் வழிமுறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2015, செப்., 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கைகளின்படி, உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியிட தேவைக்கேற்ப பணி மாறுதல் செய்தல் வேண்டும். கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில், அந்தந்த ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும்போது, பள்ளியில் சேர்ந்த தேதியின்படி, இளையவரை பணி நிரவல் ஆசிரியராக நிர்ணயிக்க வேண்டும். உபரி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை, அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, பணி நிரவல் செய்ய வேண்டும். ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள், விதவைகள், 40 வயதை கடந்து திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு, பணியிட மாறுதலில் முன்னுரிமை வழங்கலாம். பார்வை இல்லாதவர், மாற்றுத்திறனாளிகள், தான் பணிபுரியும் இடத்திலேயே பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். காலி பணியிடத்துக்கு நிரவல் செய்யும்போது, அதில் செல்லும் உபரி ஆசிரியர் பணியிடத்தினை, இயக்கக தொகுப்பு சரண் செய்ய வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை, நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment