கடலூர்,21 July 2016
மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் (பொ) கோ.விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களுக்கு ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு உதவித் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை கல்வித் தகுதிக்கு ரூ.750-ம், பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே, பதிவுதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 வயது, மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராகவோ, கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது. கல்வியினை தமிழ் நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டவர்கள் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment