FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, July 16, 2016

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

11.07.2016
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் அறம் செய் மற்றும் தூய்மை விழிகள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜபுரம் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ரா.பரமேஸ்வரி மற்றும் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வித்யாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அனைத்துவகை மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லியோனார்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவர் முகமதுசுகைபி முதலிடம் பிடித்தார். ஒய்எம்சிஏ பள்ளி மாணவர் மகேஸ்வரன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சுதீஷ்குமார், பெண்கள் பிரிவில் வீரலட்சுமியும் முதலிடம் பிடித்தனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 140 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்.கருணாநிதி, மதுரைக் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் இல.அமுதன், தொழிலதிபர் முத்துகுமரன், சித்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறம் செய் அமைப்பின் பாலாஜி மற்றும் இறையருள்மன்றம் கார்த்திகேயன், பரமசிவம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக, தூய்மை விழிகள் அமைப்பின் இயக்குநர் பி.வேல்முருகன் வரவேற்றார். இறுதியாக அறம்செய் இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.குருராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment