FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, July 16, 2016

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

11.07.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனுடையோருக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்து வைக்கிறது.

இதுவரை 256 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி சென்னையில் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 10 இடங்களில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வோருக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனுடையோராக இருக்க வேண்டும்.

இதில் கலந்துகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்போரிடம் அக்டோபர் 16-ஆம் தேதி மருத்துவம், சட்ட ரீதியான ஆலோசனைகள் நடத்தப்படும்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் தம்பதிகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை கீதா பவனத்தில் திருமணம் செய்துவைக்கப்படும்.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், www.tndfctrust.com, www.geetabhavantrust.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிம்மச்சந்திரன், செயலர் பொன்னுசாமி, ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை அறங்காவலர்கள் எஸ்.கே.கோயங்கா, கே.கே. குப்தா, ராகேஷ்கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment