FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 22, 2016

லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி


20.07.2016
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு பணியில் சேர அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு பதவிமூப்பு அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பகத்தில் இருந்து கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்துள்ளது.

அவர் நேரில் சென்று அதற்கான அனைத்து ஆவணங்களையும் சம்ர்ப்பித்துவிட்டு வந்துள்ளார். ஆனால் அது தொடர்பாக அவருக்கு எந்த பணி ஆணைக் கடிதமும் வரவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக அதே பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்து, மீண்டும் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மூன்று லட்சம் பணம் கொடுத்தால் இந்த வேலை உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம், இல்லையென்றால் வேறு யாருக்காவது வழங்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

பொன்னுசாமியும் அவரது தந்தையும் எங்களால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்க இயலாது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கடன் வாங்கியாவது கொடுங்கள், ஒரே வருடத்தில் நீங்கள் சம்பாதித்து விடலாம் என்றும் பிச்சை எடுத்தாவது எங்களுக்குப் பணம் கொடு இல்லை என்றால் இந்த வேலை உனக்கு இல்லை என்று கூறியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசயில் பிச்சை எடுக்க அம்ர்ந்த பொண்ணூசாமி, பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்துவிடலாம் என்றுதான் பிச்சை எடுக்க அமர்ந்தேன் என்றும் ஆனால் காவல்துறையினர் என்னை ஆட்சியரை சந்தித்து முறையிடக் கூட விடாமல் மிரட்டுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

No comments:

Post a Comment