FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, July 16, 2016

ஜூலை 24-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவரம்

 14.07.2016
திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சோழ மண்டல மாற்றுத் திறனாளிகள் சுயவரம் நிகழ்ச்சி ஜூலை 24-ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை கீதாபவன் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்படும் சுயவரம் நிகழ்ச்சி, மன்னார்குடி பந்தலடி வடபுறம், காந்திஜிசாலையில் உள்ள ஏ.எஸ்.ஏ.மஜீது கல்யாண மஹாலில் ஜூலை 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

சுயவரம் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் என இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இதுகுறித்து விவரம் அறிய கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கோ.தமிழரசனை 94867 41985, 99420 55817 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment