FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment