17.07.2016
பெரியமேடு: சென்னையில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அசோக் நகரில் உள்ள, சென்னை சோஷியல் சர்வீஸ் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'வேகம் - 2016' ஐந்தாவது, தடகள போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி, மாலை வரை நடந்தது.
அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய்பேச
முடியாதோர் என, பல்வேறு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், 1,150 பேர் பங்கேற்றனர்.
குண்டு எறிதல், கோணிப்பை ஓட்டம், 100, 200 மீ., ஓட்டப் பந்தயம், மற்றவர் துணையோடு ஓடுதல், பலுான் உடைத்தல் உள்ளிட்ட, 154 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்துடன், சான்றிதழும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment