04.07.2016, சென்னை, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருதுகள், சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–
விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை முதல்–அமைச்சர் ஊக்குவித்து கவுரப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கும் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தங்கப்பதக்கம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).
மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).
விண்ணப்பிக்கலாம்
இந்த விருதுகளைப்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை–78 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை என்ற முகவரிக்கு 12.7.16–க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment