FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 29, 2014

ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு உதவி

29.01.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில், ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், ஏழை, எளியோர் மாற்றுத்திறனாளிகள், 500 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உணவுதொழில் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தஞ்சை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியசர்மா தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் சலீம் அக்பர் வரவேற்றார். இவ்விழாவில், கவுரவ தலைவர்கள் ராமதாஸ்ராவ், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கலெக்டர் சுப்பையன், திருச்சி மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், ஏழை, எளியோயார் 500 பேருக்கு இலவச சீருடை, போர்வை, தட்டு, டம்ளர், மூன்று சக்கர சைக்கிள் உள்பட, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் சுப்பையன் பேசுகையில், ""உணவு சமைத்து, அளிக்கும் தொழில் உன்னதமானது. மக்களின் தேவை, எதிர்பார்ப்பு தற்கால சூழலில் அதிகமாக உள்ளது. போட்டி உலகமாக தற்போதைய சமுதாயம் மாறி வருகிறது. இச்சூழலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அடுத்த கட்ட முன்னேற்ற படியை அடைய வேண்டும். மக்களுக்கு சேவை அடிப்படையில் பணியை தொடர வேண்டும்,'' என்றார். திருச்சி ஐ.ஜி., ராமசுப்பிரமணி பேசுகையில், ""பிற தொழிலாளரை விட ஹோட்டல் உரிமையாளர்கள், பொது சேவையை ஆற்றும் வகையில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில், வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். இவ்வகையில், வாடிக்கையாளர்கள் பாராட்டை பெறும் வகையில், உணவை சமைத்து, அளித்து சேவையாற்றுவோர் பலர் உள்ளனர். ஹோட்டல் தொழில் அதிகம்பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை நகர ஹோட்டல்கள் சங்க தலைவர் பாண்டுரெங்கன், செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில செயற்குழு தலைவர் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையில் நடந்தது. விழாவை மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நகர பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment