எஸ்எம்எஸ் கட்டணத்தை கண்டித்து செல்போன்களை வீதியில் வீசியெறிந்து மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் மாவட்ட காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ்களுக்கு முழு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், ஐ.நா. விதிகளின் படி காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் இலவசமாக தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை வீதியில் வீசியெறிந்து, கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Thanks to
No comments:
Post a Comment