29.01.2014, மதுரை :
பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகைக்கு, டாக்டரின் கையெழுத்து பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மதுரை கோச்சடையைச் சேர்ந்த பாக்கியத்தின் மகன் வாசு, 10. பிறவியிலேயே வளைந்த கால்களை உடைய இவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக சான்று உள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வதற்கு துணையாக ஒருத்தர் உடன் செல்வதற்கான, விண்ணப்ப படிவத்தில் டாக்டர் கையெழுத்திற்காக, தாயும், மகனும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.
அங்குள்ள டாக்டர், மதியம் 2 மணிக்கு மேல் கையெழுத்து இடுகிறேன் என, அனுப்பியதால், காலை 8 மணியிலிருந்து மதியம் 1.45 மணி வரை காத்திருந்தனர். அதன்பின் பணியாளர்கள் உதவியுடன், உதவி நிலைய மருத்துவ அலுவலரிடம் கையெழுத்து பெற்றனர்.
டாக்டர்கள் கூறுகையில்,''இந்த சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரே போதும். துவரிமானில் அவ்வசதி உள்ளது. அடையாள அட்டையும், ஊனத்திற்கான சான்றிதழும் இருக்கும் போது, டாக்டர்கள் கையெழுத்திட தயங்குவது வேதனையாக உள்ளது,'' என்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை மட்டும் வழங்கினால் போதுமென நினைக்கின்றனர்.
பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டால் கூட, யாரை அணுகுவதென குறிப்பிடவில்லை.
போன் எண்ணும் இல்லாததால், பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், மதுரை அரசு மருத்துவமனையில், மணிக்கணக்கில் பரிதாபமாக காத்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள், அவர்கள் பெற்றோர்களின் நிலை கருதி, அனைத்து வசதிகளையும், கலெக்டர் அலுவலகத்தில் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
Thanks to Dinamalar

No comments:
Post a Comment