மாற்று திறனாளிகள் சங்க மாநில துணை தலைவர் தீபக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2010ல் சுதாகவுர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலனை பேணிக் காப்பதற்கும், அதற்கான சட்டம் அமைக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2011ல் குழு விரிவான அறிக்கை தயாரித்து 2012ல் மத்திய சமூக நலத்துறை, சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவற்றின் கருத்துக்களை கேட்க அனுப்பியது. எந்த ஒரு சட்டத்தையும் விவாதத்துக்கு பிறகே அமல்படுத்த வேண்டும். தற்போதைய மத்திய அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதுநாள் வரை இந்த சட்டம் குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு அளிக்கவில்லை. இந்த சட்டத்தை விவாதத்துக்கு பிறகே நிறைவேற்ற வேண்டும் என்றார். பேட்டியின்போது சந்திரகுமார், மீனாட்சி, ராஜீவ்ராஜன், அம்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
Thanks to
No comments:
Post a Comment